Saturday 26 November 2011

என் நாட்குறிப்பின் ஒரு பக்கம்

            இது எனது முதல் முயற்சி.   என் அனுபவங்களையே எழுதிவந்த நான் முதல் முறையாக ஒரு கற்பனை கதை எழுதியிருக்கிறேன்.  விமர்சனங்கள் எதிர்பாக்கப்படுகின்றன.

            எனது பெயர் சம்சங்கிகோ என்சாம் எக்கோ 32 ....   என்சாம் எக்கோ 32  என்ற எந்திரக்கடவுளை வேண்டியதால் நான் பிறந்தேனாம் அதனால் அவர்பெயரே எனக்கு வைத்துவிட்டார்கள்.   சரி... எனது orange mPad இன் படி நான் இப்பொழுது செய்ய வேண்டியது இன்று நடந்தவைகளை தொகுத்து அனுப்ப வேண்டும்... அதாவது ரிப்போர்ட் ரெடி பண்ணனும்...

            25 / 11 / 2524 காலை 2 மணிக்கு தொடங்கியது இந்நாள், வழக்கம் போல வெயில் 58  டிகிரி.  எனது ரோபோ வழங்கிய தேனீர் கலவையையும், கார்போஹைட்ரெட் மாத்திரை 1 , வைட்டமின் 2 , புரோட்டின் 2  சாப்பிட்டுவிட்டு 204 வது மாடியில் உள்ள எனது அறையிலிருந்து கிளம்பி sky scooter மூலம் என் அலுவலகத்திற்கு கிளம்பினேன்.   சரியாக அலுவலகம் புறப்படும் பொழுது பக்கத்துக்கு அறை நண்பர் என் mPad கு அழைத்தார்.  அவர் ரோபோ மனைவிக்கும் அவருக்கும் ஏதோ பிரச்சனையாம், நல்லவேள என் மனைவி ரோபோ இல்ல... ம்ம்ம் ..  அவருக்கு ஆறுதல் சொல்லபோக அலுவலகத்திற்கு தாமதம் ஆகியது.     போகும் வழியில் ஸ்கூட்டர்கு  செமிச்டோல் போட்டேன்.

                அலுவலகத்திற்கு தாமதம் ஆனதால் என் ரோபோ மேனேஜர் கத்தியது.  மேனேஜர் மனுஷனா இருந்தாலும் ரோபோவாக இருந்தாலும் கத்தத்தான் செய்வாங்க போல...   காலை 7 மணிக்கு அலுவலக இடைவேளையில் கார்பரேஷன் ஆபிசுக்கு வீட்டுல சொட்டுநீர் குழாய்ல தண்ணீர் வராததைப்பற்றி கம்ப்ளைன்ட் பண்னச்சென்றேன்.   அரசாங்க அலுவலகத்தில் வேலைசெய்யும்  எந்த ரோபோகும் சம்பளம் கொடுக்கல போல அவ்ளோ மெதுவா வேலை செய்யுது.  மனுஷன் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ரோபோ கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசாங்க அலுவலகம் என்னமோ மாறுவது இல்லை.    வரும் வழியில்  நண்பர் சந்கிச்கியை சந்தித்தேன் அவருக்கு திருமணம் என டிஜிட்டல் அழைப்பிதழை தந்து சென்றார்.

             மதிய உணவு எடுத்துசெல்ல மறந்துவிட்டதால் உணவு விடுதிக்கு சென்று 3 கார்போஹைட்ரெட் , 4 வைட்டமின் , 1 கொழுப்பு மாத்திரையும் 20 ml தண்ணிரையும் வாங்கிக்கொண்டேன். தண்ணீருக்கான மாத்திரையையும் கண்டுபிடிக்கபோவதாக அறிக்கை கொடுத்திருக்காங்க.... கண்டுபிடிச்சா நல்ல இருக்கும் விலைவாசி தாங்க முடியல.  3 மணிக்கு அலுவலகம் முடிந்து வீட்டிற்கு போகும் வழியில் ஷாப்பிங் சென்றேன்.  நேனோ எரோ ட்டிக் பைபரில் செய்த டிரஸ் வாங்கினேன்.  அடிக்கிற வெயிலுக்கு இது குளுமை தரும் என விளம்பரத்தில் பார்த்தேன்

            மாலை 5 மணிக்கு நண்பர்களுடன் 450 வது  மாடியில் சிறிய சந்திப்பு.   7 மணிக்கு இரவு உணவு.  8 மணிமுதல் 12 மணிவரைக்கும் வால் ஸ்க்ரீன் டிவி ப்ரொஜெக்டரில் புதிதாக வெளிவந்த படங்களை பார்த்தேன்.  புதிதாக இன்டர்நெட்டில் அறிமுகபடுத்தியிருக்கும்  moongil- இல் புதிதாக வந்த அனைத்து நாட்டு படங்களையும் அடுத்த நாளே பார்க்கலாம்.    மணி 12 கு தூக்க மாத்திரை ஒன்றை விழுங்குவதன்மூலம் இந்நாள் இனிதே நிறைவடைகிறது.


பிகு 
என் பெயர் சம்சங்கிகோ கு விளக்கம் சொல்லலியே அது சன்முககுமார் என்ற என் 4 தலைமுறைக்கு முந்தய தாத்தாவின் பெயர் மருவு .
             

Thursday 10 November 2011

வேலாயுதம்

                         வேலாயுதம் இளையதளபதி நடித்து தீபாவளிக்கு வெளியான படம்.  படம் வெளியாகி ரசிகர்கள் சண்டை போட்டுமுடித்த இந்த நேரத்தில் என்ன விமர்சனம் எழுதவேண்டிகிடக்கு என நீங்கள் யோசிக்கலாம்.  என்ன செய்ய நான் படம் பார்த்தது நேற்று தானே.  படம் பார்த்து முடித்தவுடனேயே முடிவு செய்துவிட்டேன் பதிவு கண்டிப்பாக எழுதியாக வேண்டும் என்று.   இந்த பதிவில் நான் எழுதபோவது அனைத்தும் எனது கருத்துக்கலேயன்றி யாரையும் புகழவேண்டும் என்றோ அல்லது இகழ வேண்டும் என்றோ எழுதுவது அல்ல.

                        விஜய் படம் என தெரிந்ததுமே கதையும் தெரிஞ்சாச்சி.. டிரைலர் பாத்ததும் படம் பார்த்த திருப்தி வந்துவிட்டது.  இருந்தாலும் விஜய் படம்னா பொழுதுபோக்குக்கு உத்திரவாதம் அதனால் படம் பாக்கலாம்.   சரி இனி வேலாயுததைப்பற்றி  பார்ப்போம்....   முதல் காட்சியிலேயே ஏதோ முஸ்லிம் தீவிரவாதிகள் தமிழ் நாட்டு அரசியல்வாதியை கடத்தி தமிழ் நாட்டின் அமைதியை குலைக்க ஏற்பாடு செய்கிறர்கள்.  ஒருவேள தெரியாம விஜயகாந்த் படத்துக்கு வந்துட்டோமானு யோசிச்சிட்டே படத்த பார்க்க துவங்கினேன்.  அடுத்த காட்சில விஜய் அரிவாள் எடுத்துட்டு ஓடிவரார்...  அபாடா விஜய் படம் தான்.... இப்ப ஏதோ சண்டை வரும்னு பாத்தா தங்கச்சிக்கு ட்ரைன்ல இடம் புடிக்கிக்ராறு.. அப்டியே இந்த அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் இடையிலான பாசத்த flashbackலையே  புரியவைக்கிறாங்க...



                        விஜய் தற்செயலாக செய்யும் செயல்கள் எல்லாம் ஜெனிலியா உருவாக்கிய கற்பனை கதாபாத்திரம் செய்வதாக மக்கள் நம்ப விஜய்க்கே தெரியாமல் விஜய் மக்களின் கடவுளாகிறார்.  விஜய்க்கு உண்மை தெரிய வரும்பொழுது எனக்கு எதற்கு வம்பு என ஒதுங்க அவருக்கே வருகிறது பிரச்சனை... தன்னை ஏமாற்றிய சீட்டு கம்பெனிக்காரனை துவைப்பதில் துவங்குகிறது சூப்பர் ஹீரோ பயணம்.   அனைத்து கெட்டவர்களையும் துவைத்து, தங்கையை இழந்து, மக்களுக்கு அறிவுரைகூறி இனிதே முடிகிறான் வேலாயுதம்.  இது கதை சுருக்கம்.  

                        விஜய் படம் அதனால் அவர் மட்டுமே படம் முழுக்க வருகிறார், மற்ற எல்லோரும் வந்து தலைகாட்டிவிட்டு செல்கிறார்கள்.    முதலில் ஜெனிலியா எல்லா படத்திலும் லூசு பெண்ணாக வருபவர் இதில் கொஞ்சம் நடித்துள்ளார்.   ஜெனிலியா வழக்கமாக செய்யும் வேலையே  இதில்  ஹன்சிகா வேலை.   விஜயை சுத்தி சுத்தி வருகிறார் அவ்வளவு தான்.  படத்திற்கு இருக்கும் ஒரே ஒரு பிளஸ் சந்தானம்.   எல்லா படத்தலையும் வில்லன்கள் பக்கம் பக்கமா வசனம் பேசுவாங்க இதில்  அந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை.  ராகவ் கொடுத்த சம்பளத்திற்கு வேலைசெய்திருக்கிறார் பிரச்சனை நடக்கும் இடத்திற்கெல்லாம் வேலாயுதம் வர்றாரோ இல்லையோ இவர் கரெக்டா வந்து வேலாயுதம் புகழ்பாடிட்டு போறாரு.

                   சரண்யா மோகன் அண்ணனுக்கு தப்பாத தங்கச்சி... ஊர் மக்களை காப்பாத்த தன் உயிரை தியாகம் செய்கிறார்.  இது தவிர ஊர் மக்கள், போலீஸ், சில வில்லன்கள்  இப்டி பலர் இருந்தாலும் எல்லாரும் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வருவதால் அவர்களை பற்றி பேச எதுவும் இல்லை.    பொதுவாக இது போன்ற படங்களில் ஒரே மாதிரியான பிரச்சனைகளை ஹீரோ சமாளிப்பார்.  இதில் பல பிரச்சனை அதனாலோ எனவோ எந்த மக்கள் பிரச்சனையும் மனதை தொடும் வகையில் படமாக்கப்படவில்லை.  இது தவிர படம் முழுக்க அரசியல் பொடி தூவியிருக்கிறார் ராஜா.  பாடல்கள் எல்லாம் நன்றாக உள்ளது.  விஜயை சூப்பர் ஹீரோவாக காட்டுவதிலேயே முனைப்பாக இருந்ததாலோ எனவோ எந்த உறவும் ஆழமாக பிரதிபலிக்கப்படவில்லை.   வழக்கமாக நடனத்தில் தன் தனித்துவத்தை காண்பிக்கும் விஜய் கடந்த சில படங்களாக ஏதோ ஆடிவிட்டு போகிறார்.  சிம்ரனுக்கு பிறகு நடனம் ஆடத்தெரிந்த ஒரு கதாநாயகி விஜய்க்கு ஜோடியாக்கப்படவில்லை என்பது எனது கருத்து.  

                        இது போன்ற படத்தை எடுக்க பேரரசு போதுமே ராஜா எதற்கு??   அரசியல் நெடி இல்லாமல் சாதாரணமாக எடுத்திருந்தால் திருப்பாச்சி மாதிரி ஒருவேளை பெரிய வெற்றி அடைந்திருக்கலாம்.    விஜயிடமிருந்து வித்தியாசமான நடிப்பு அல்ல வித்தியாசமான கதைகளம் அமைந்த படங்களையாவது எதிர்பார்க்கிறோம்.   வில்லு படத்திற்கு பிறகு அவரது ரசிகர்களே ஏமாற்றம் அடைந்திருப்பது உண்மை.  இதை உணர்ந்து இனிவரும் படங்களையாவது வித்யாசமாக தேர்ந்தெடுப்பர் என நம்புவோம்.