Saturday 30 July 2011

ரயில் பயணம்

                    இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் transport train தான் அதனால் கடந்தவாரம் சென்னை செல்ல நானும் ரயிலே சிறந்ததென முடிவு செய்தேன்.   அப்பொழுது எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இந்த பதிவில் எழுதபோகிறேன்.   

 

                     இரவில் பயணம் செய்வதைவிட பகலில் பயணம் செய்வது மிகவும் சுவாரசியமானது.  அதுவும் பொது பயணிகள் பெட்டியில் பயணம் செய்யும்போது நாம் பல அனுபவங்களை பெறலாம்.  சென்னை செல்லும்போது இரவில் பயணம் செய்த நான் திரும்பி வரும்பொழுது பகலில் பயணம் செய்தேன்.  வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் சகபயணிகள் அதை தெரியாமல் பார்த்துக்கொண்டார்கள்.  ரயில் புறப்பட்ட சிலநிமிடங்களுக்கு அனைவரும் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டும் சிலர் புத்தகத்தை படித்துக்கொண்டும் இருந்தார்கள்.   அடுத்த சில மணிநேரத்தில் எதிரிலிருபவரிடம் சிறிய புன்னகையுடன் நமது நட்பு ஆரம்பமானது.


                    அரசியல், சினிமா போன்றவற்றை விவாதிக்கும்போது சில நண்பர்கள் கிடைத்தார்கள்.  ஒரே ஊர்க்காரர்களையும், எனது கல்லூரி தோழியும் சந்திக்கநேர்ந்தது.  ஒரே ஊரிலிருந்துகொண்டு சந்திக்காத நாங்கள் அந்த பயணத்தில் சந்தித்தது ஆச்சர்யம்.  இதைவிட சுவாரசியம் என்னவென்றால் ஒவ்வொரு ஊர் நிறுத்தம் வரும்பொழுதும் அந்தந்த ஊர் ஸ்பெஷல் திண்பண்டங்கள் கொண்டுவருவார்கள்.   பலா சுளை, முறுக்கு, மல்லிகை பூ, திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா என  இது ஒரு தனிப்பட்ட சுவாரசியம்.   இப்படி ரயில் பயனதாலேயே அந்தந்த ஊர் ஸ்பெஷல் திண்பண்டங்களை அறிந்து கொள்ளலாம்.
                    இது ஒருபுறம் இருக்க நமது ரயில்வேகாரர்களும் தன்பங்கிற்கு வடை, பஜ்ஜி, கேசரி, போளி என விற்றுக்கொண்டிருந்தார்கள்.  பாவம் குழந்தைகளை வைத்திருந்தவர்கள்தான் போராடிக்கொண்டிருந்தார்கள்.  திண்பண்டம் விற்பவரும் குழந்தைகள் பக்கமாகவே விற்றுக்கொண்டிருந்தார்.  என்ன செய்வது அவரவர் பிரச்சனை அவரவருக்கு.  


                    இப்படி பல சுவாரசியங்கள் நடந்துகொண்டிருந்தாலும் ரயில் ஆரல்வாய்மொழி வந்ததும் ஒரு குளிர்ந்த காற்று, அனைவர் முகத்திலும் ஒரு சந்தோசம் " ஆஹா நம்ம ஊர் வந்தாச்சி !!!".  என்னதான் சொல்லுங்க நம்ம ஊர் நம்ம ஊர் தான்.    "சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா?" என மனதிற்குள் பாடிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.







                    .  

No comments:

Post a Comment